கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி

கடலூர்: கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் சிப்காட்டில் கிரீம்சன் என்ற பூச்சிக்கொல்லி ரசாயனம் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. ஷிப்ட் அடிப்படையில் ஆலைக்கு தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர். அந்த வகையில் இன்று காலையில், ஆலையின் இரண்டாவது தளத்தில் இருந்த பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் ஆலையை சூழ்ந்த புகையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். எனவே பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

மேலும், ஆலையின் உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பாய்லர் வெடித்ததால் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கண் எரிச்சல் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Dinamalar

Fair Use Statement

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி
Scroll to top