கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை சுற்றுப்புறங்களில் கடும் மாசு: நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
இந்து தமிழ் 7 March 2021: கடலூர் தொழிற்பேட்டையால் சுற்றுப்புறங்களில் ஏற்படும் மாசுவுக்கு காரணமான தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சங்கொலிகுப்பத்தை சேர்ந்த மீனவர் எஸ்.புகழேந்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில் 20 தொழிற்பேட்டைகளையும், 6 […]